#image_title
2003 இல் வெளியான ‘அன்பு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாலா. ‘தவமின்றி கிடைத்த வரமே’ பாடலாலும், வடிவேலுவின் காமெடியாலும் தற்பொழுது ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது . அன்பு படத்தை தொடர்ந்து தமிழில் இவர் காதல் கிசுகி,சு கலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வெற்றியை தேடி தரவில்லை.
இதை தொடர்ந்து 2006 இல் வெளியான கலாபம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். தற்பொழுது இவர் அதிகம் மலையாள திரைப்படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அண்ணன் சிவா இயக்கிய ‘வீரம்’ திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார் நடிகர் பாலா. இவர் 2010 இல் அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2019ல் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து 2021ல் எலிசபெத் என்ற டாக்டரை மறுமணம் செய்து கொண்டார் நடிகர் பாலா. இவரது முன்னாள் மனைவியான பாடகி அம்ருதா சுரேஷும் மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பாலா, இசையமைப்பாளர் கோபி சுந்தர் குறித்து கோபமாக பேசியுள்ளார். அதில் தன் மனைவியை தன்னிடமிருந்து பிரித்தது கோபி சுந்தர் தான் என்று கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘அம்ருதா சுரேஷை காதலித்து நான் திருமணம் செய்து கொண்டது உண்மை. அவரை சட்டபடி விவாகரத்து செய்ததும் உண்மை . ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் யாருக்கும் தெரியாது.
இது எல்லாவற்றுக்கும் இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான் காரணம். அவர்கள் இருவரும் எப்படி இருந்தார்கள் என எல்லாமும் எனக்குத் தெரியும். சில விஷயங்களை பொது இடத்தில் பகிர்வதில் தனக்கு விருப்பம் இல்லை. உண்மைகளை பேசினால் அது தனது மகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.
எனது மகளை கூட பார்க்க விடாமல் என்னை தடுக்கிறார்கள். இவர்கள் கொடுத்த டார்ச்சரால் நான் தற்கொலை வரை சென்று உயிர் பிழைத்தேன்.” என்று கூறியுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பேட்டியானது மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…