#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பகீரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
சமீபத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கப்போகும் தல 64 திரைப்படத்தை பற்றி தான் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக் சுப்புராஜ், விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பிரபுவின் மகளான ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இயக்குனர் ஆதிக்கிற்கும் இது இரண்டாவது திருமணம் தானாம். இத்தகவலை பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பிரபல தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது பயங்கர ஷாக்கில் உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…
பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…
வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…