Categories: சினிமா

“இப்டி தான் 1945-ல”… இந்த காமெடியில் வந்த நடிகரை ஞாபகம் இருக்கா..? அவர் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சீனிவாச ஐயர். இவரை ‘மேனேஜர் சீனா’ என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.  இவர் நாடகங்களில் நடிப்பதில் வல்லவர். துர்தர்ஷன் தொலைக்காட்சியில் நடித்த இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1975ல்  கோபாலகிருஷ்ணனின் ‘ராஜயோகம்’ என்று நாடகத்தில் மேனேஜர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார் .

அதனால் இவரது பெயர் மேனேஜர் சீனா என்று அழைக்கப்பட்டது. 3800-க்கும் மேற்பட்ட நாடகங்கள், 80-க்கும்  மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார் மேனேஜர் சீனா. இவர் நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். இவருக்கு தற்பொழுது வயது 80க்கும் மேல் ஆகிவிட்டதால் வயது மூப்பின் காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பாக இவர் வடிவேலுவுடன் ‘இப்டி தான் 1945-ல’ என்று பேசிய காமெடி வசனமானது இன்றளவும் பிரபலம் தான். இதுமட்டுமின்றி நடிகர் விவேக் உடன் பல காமெடி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒருகிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கூடைப்பந்து,  டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளையும் விளையாடியுள்ளாராம். சமீபத்தில் தனது மனைவியை இழந்த இவர் தற்பொழுது தனது ஒரே ஒரு மகனுடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இவர் தான் சேர்த்து வைத்த சொந்த காசில் சந்தோசமாக இருப்பதாகவும், யாரிடமும் கைநீட்டி ஒரு ரூபாய் வாங்கும் நிலையில் இல்லை எனவும், என் மகனிடமே எனக்கு செலவுக்கு காசு கொடு என்று கேட்க மாட்டேன். ஆண்டவன் என்னை நன்றாகத்தான் வைத்திருக்கிறான் இந்த வயசிலும் என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லணும்’ என்று சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

Begam

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago