Categories: சினிமா

30 ஆண்டுகளாக படுத்த படுக்கை…! சகிக்க முடியா வேதனைகளுடன் மரணமடைந்த ‘என் உயிர் தோழன்’ நடிகர்…!

Spread the love

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அறிமுகங்கள் என்றாலே தமிழ்திரையுலகை ஒரு கலக்கு கலக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள். கார்த்திக், பாண்டியன், ராதா, ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா உள்ளிட்டோரை சொல்லலாம். அதேபோல் அவருடைய உதவி இயக்குநர்களும் நடிப்பு, இயக்கத்தில் வெளுத்து வாங்கியவர்கள் தான். மணிவண்ணன், பாக்யராஜ், மனோ பாலா, சித்ரா லட்சுமணன், பொன் வண்ணன், சீமான் ஆகியோரே அதற்கு சிறந்த உதாரணம் .

அப்படித்தான் பாபு என்கிற உதவி இயக்குநரையும் தன்னுடைய என் உயிர் தோழன் என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகம் செய்தார். படமும் நன்றாக போனது. அடுத்து பாபு விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி என்ற படத்தில் நடித்தார், அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது தவறி விழுந்து முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டது.

இதையடுத்து திரைத்துறையில் இருந்து ஒதுங்கிய அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல திரைத்துறை பிரபலங்கள் இவருக்கு உதவி செய்தனர். 30 வருடங்களாக படுக்கையில் கிடந்த அவருக்கு அவரின் தாயார் பணிவிடைகளை செய்து வந்தார். அவருக்கும் 80 வயது ஆகிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா நேரில் போய் அவரை பார்த்துவிட்டு வந்தார்.

கடந்த சில மாதங்களாக அவரின் உடல்நிலை மோசமடைந்தது. ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல் நிலை நேற்று மோசமடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது அவர் மரணமடைந்துள்ளார். இத்தகவலை அறிந்த ரசிகர்களும், திரைபிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

விவசாயி மனைவி கணக்கில் ₹10 கோடி… அடுத்த நொடியே அந்தப் பெண் எடுத்த அதிரடி முடிவு… சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு…!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி, தனது வங்கிக் கணக்கில் எதிர்பாராத விதமாக வந்த…

59 minutes ago

TVK வேட்பாளர் லிஸ்ட் அவுட்… அடுத்த செகண்டே நடந்த ரெய்டு… விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்..!!

சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

1 மணத்தியாலம் ago

பரபரப்பு..! அஜிதாவுக்கு சீட் இல்லை.. TVK கொடியைக் கழற்றி எறிந்து தவெக ஆதரவாளர் ஆவேசம்… தூத்துக்குடியில் வெடித்த அதிருப்தி…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மார்ச் 29, 2026) தனது கட்சியின் 234 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.…

1 மணத்தியாலம் ago

எனக்கு ஏன் சீட் கொடுக்கல..? 2 மாசத்துக்கு முன்னாடி என்கிட்ட சேர்ந்தவருக்கு சீட்… கொந்தளித்த தவெக நிர்வாகி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக,…

1 மணத்தியாலம் ago

BREAKING: அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்… எடப்பாடி பழனிச்சாமி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

அதிமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தூசி கே.மோகன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள்…

1 மணத்தியாலம் ago

சிறை சென்றவருக்கு ‘சீட்’ கொடுத்த தளபதி… கரூரை கைப்பற்ற தவெக போடும் பலமான ஸ்கெட்ச்… அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர்…

1 மணத்தியாலம் ago