தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி , தற்பொழுது நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த ‘நான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு திரை உலகில் சிறந்த நடிகர் என்ற ஒரு அடையாளத்தையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்தது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
நடிகர் விஜய் ஆண்டனியின் ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மீரா, லாரா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 17 வயது மகள் லாரா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாராவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் லாரா இறப்பிற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மனஅழுத்தத்திற்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி யாரும் தற்கொலை செய்யாதீங்க என்று மேடையில் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் அவர், ‘ ‘எனக்கு 7 வயசு. என் தங்கச்சிக்கு 5 வயசு. என் அப்பா அப்ப தற்கொலை பண்ணிக்கிட்டாரு. அது எவ்ளோ பெரிய வலின்னு எனக்கு மட்டும் தான் தெரியும். யாரும் தற்கொலை பண்ணிக்க கூடாது’ என உருக்கமாக பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ…
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…