சோழ மன்னர்களின் தலைநகரம்… பூம்புகார் எனப்படும் காவேரிபூம்பட்டினத்தின் வரலாறு…

Spread the love

இந்தியா மிகவும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் கொண்ட தலமாகும். இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் யாரும் அறியாத பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் பூம்புகார் எனப்படும் காவிரி பூம்பட்டினம். சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இந்த பிரம்மாண்டமான பூம்புகாரின் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

தமிழ் பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள இந்த பூம்புகார் நகரமானது தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு கிழக்கே 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. சோழ நாட்டின் முக்கிய நாகரிக அடையாளமாக காவிரி ஆற்றில் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த பூம்புகார் நகரம் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கியது.

கிபி ஐநூறாம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கடல் கொந்தளிப்பில் இந்த வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் புதையுண்டு போனதாக கூறப்படுகிறது. ஆனாலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் இந்த இடத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை கண்டெடுக்க தான் செய்கிறார்கள்.

பூம்புகார் நகரம் மிகவும் பழமையானது. சூரிய இனத்தை சேர்ந்த பெரிய முற்சுந்த சோழன் காலத்தில் இந்திரன் ராஜ்ஜியாமான அமராவதிக்கு எதிரான போரில் தனது படையை பூம்புகார் வழியாக வழிநடத்தினார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. நாம் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்திருப்போம். அதில் ராஜராஜ சோழனின் வீரத்தையும் பலத்தையும் சாதுர்யத்தையும் எடுத்துக்காட்டி இருப்பார்கள். அப்படி இராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் இந்த பூம்புகார் வழியாக உலகம் முழுவதும் வணிகம் செய்வதற்காக கப்பல்கள் இந்த பூம்புகாரில் இருந்து தான் இயக்கப்பட்டு இருக்கிறது.

அத்தனை சிறப்பு வாய்ந்த இந்த பூம்புகாரை ஒருமுறையாவது சென்று பார்த்துவிட்டு வாருங்கள். பூம்புகாரில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அதில் முக்கியமானது சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாசிலாமணி நாதர் கோயில். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் சோழ மன்னர்களின் வாழ்க்கை முறையை கண்டுபிடிக்கும் வகையாக பல ஆராய்ச்சிகளை இங்கு மேற்கொண்டு வருகிறார்கள்.

admin

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

26 minutes ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

29 minutes ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

32 minutes ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

34 minutes ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

39 minutes ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

40 minutes ago