#image_title
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் படுகா குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சாய் பல்லவி பள்ளி படிப்பை முடித்த பிறகு மருத்துவம் பயில்வதற்கு கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்ற பிறகும் இவருக்கு சிறு வயதிலிருந்து டான்ஸ் மற்றும் சினிமாவில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது.
சினிமாவில் வாய்ப்பு தேடிய சாய்பல்லவி கஸ்தூரிமான் தாம்தூம் போன்ற திரைப்படங்களில் பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். இது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற டேன்ஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டிருப்பார். மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நாயாகியாக சினிமாவில் அறிமுகமானார் சாய்பல்லவி. முதல் படத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சாய்பல்லவி சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதையும் வென்றார்.
தமிழில் மாரி 2 பாவ கதைகள் ஆகிய திரைப்படத்தில் நாயகியாக நடித்த சாய் பல்லவி சிவகார்த்திகேயன் இணைந்து நடித்திருக்கும் அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சாய்பல்லவிக்கு புதிதாக ஒரு பிரச்சனை உருவாகி இருக்கிறது. இதனால் அமரன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
அது என்னவென்றால் சிறிது காலத்திற்கு முன்பு சாய் பல்லவி ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார். அதில் காஷ்மீரி பைல்ஸ் படத்தை பார்த்தேன். அதில் இந்துக்களை கொன்று இருக்கிறார்கள். அதே போல் மற்றொரு நிகழ்வும் நடந்திருக்கிறது. இஸ்லாமியர்களையும் இந்துக்கள் கொன்றிருக்கிறார்கள். இது ரெண்டுமே மதசார்பினால் நடந்தது.
மதத்தை வைத்து பிரச்சினை வரும்போது அதே போல் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தை தீவிரவாதிகளாக நினைக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது என்று அவர் பேசியிருந்த அந்த நேர்காணல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி சாய் பல்லவிக்கு எதிர்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. இதனால் Boycott Saipalavi ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…