poompuhar

சோழ மன்னர்களின் தலைநகரம்… பூம்புகார் எனப்படும் காவேரிபூம்பட்டினத்தின் வரலாறு…

By admin on ஐப்பசி 29, 2024

Spread the love

இந்தியா மிகவும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் கொண்ட தலமாகும். இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் யாரும் அறியாத பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் பூம்புகார் எனப்படும் காவிரி பூம்பட்டினம். சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய இந்த பிரம்மாண்டமான பூம்புகாரின் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

தமிழ் பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள இந்த பூம்புகார் நகரமானது தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு கிழக்கே 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. சோழ நாட்டின் முக்கிய நாகரிக அடையாளமாக காவிரி ஆற்றில் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த பூம்புகார் நகரம் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கியது.

   

கிபி ஐநூறாம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கடல் கொந்தளிப்பில் இந்த வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் புதையுண்டு போனதாக கூறப்படுகிறது. ஆனாலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்ளவும் இந்த இடத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை கண்டெடுக்க தான் செய்கிறார்கள்.

 

பூம்புகார் நகரம் மிகவும் பழமையானது. சூரிய னத்தை சேர்ந்த பெரிய முற்சுந்த சோழன் காலத்தில் இந்திரன் ராஜ்ஜியாமான அமராவதிக்கு எதிரான போரில் தனது படையை பூம்புகார் வழியாக வழிநடத்தினார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. நாம் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்திருப்போம். அதில் ராஜராஜ சோழனின் வீரத்தையும் பலத்தையும் சாதுர்யத்தையும் எடுத்துக்காட்டி இருப்பார்கள். அப்படி இராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் இந்த பூம்புகார் வழியாக உலகம் முழுவதும் வணிகம் செய்வதற்காக கப்பல்கள் இந்த பூம்புகாரில் இருந்து தான் இயக்கப்பட்டு இருக்கிறது.

அத்தனை சிறப்பு வாய்ந்த இந்த பூம்புகாரை ஒருமுறையாவது சென்று பார்த்துவிட்டு வாருங்கள். பூம்புகாரில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அதில் முக்கியமானது சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாசிலாமணி நாதர் கோயில். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ன்றளவும் சோழ மன்னர்களின் வாழ்க்கை முறையை கண்டுபிடிக்கும் வகையாக பல ஆராய்ச்சிகளை இங்கு மேற்கொண்டு வருகிறார்கள்.