அமீர் சுல்தான் எனப்படும் அமீர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். பொருளாதாரம் பயின்று இருந்த அமீர் சினிமாவில் ஆர்வம் கொண்டு சென்னைக்கு குடி பெயர்ந்தார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலா அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அமீர். பாலா இயக்கி விருது பெற்ற திரைப்படமான சேது மற்றும் 2001 ஆம் ஆண்டில் நந்தா ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார்.
அமீர் அதற்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் தான் திரிஷா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடித்திருந்த மௌனம் பேசியதே திரைப்படம் அவருக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்ததால் பாராட்டுகளையும் பெற்றது. 2005 ஆம் ஆண்டு ஜீவாவை வைத்து ராம் பின்னர் 2007 ஆம் ஆண்டு மூத்த நடிகர் சிவகுமார் அவர்களின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தியை அறிமுகம் செய்து பருத்திவீரன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. 2009 ஆம் ஆண்டு யோகி 2013 ஆம் ஆண்டு ஆதி பகவன் ஆகிய திரைப்படத்தை எழுதி இயக்கி இருந்தார் அமீர். பின்னர் நடிப்பில் ஆர்வம் காட்டிய அமீர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். வட சென்னை, மாறன், நினைத்தது யாரோ, யுத்தம் செய், பூஜா திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அமீர். வடசென்னை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருதினை வென்றிருக்கிறார் அமீர்.
இந்நிலையில் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’. இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அமீர், முதன்முதலில் “நீலம் புரொடக்ஷன்” என்று பெயர் வைக்கும்போது ரஞ்சித் எதோ ஒரு பெயரை வச்சிட்டாரு என்று நினைத்தேன். ஆனால் இதன் ஒவ்வொரு படைப்பையும் பார்க்கும்போது ரஞ்சித் இந்த தாய்முறைக்கு எதோ கற்று கொடுக்கணும்னு நினைக்காரு. அவரு நினைச்சிருந்தா ரஞ்சித் புரொடக்ஷன் என்று வச்சிருக்கலாம். ஆனா நீலம் ன்னு வச்சிருக்காரு. இந்த நிறுவனத்தின் படம் ஒரு மரியாதைக்குரிய படமா இருக்கு. இதே மாதிரி கடைசி வரைக்கும் இருக்கணும். ஏனென்றால் இது மாதிரி நிறைய நிறுவனங்கள் பேனர் வச்சிக்கிட்டு கண்ட கருமத்தை பண்ணி வச்சிடுவாங்க. அது மாதிரி இல்லாம கடைசி வரைக்கும் இப்படியே இருக்கனும்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…