கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் வசித்து வந்தவர் அஜிகுமார். இவருடைய மனைவி ரமணி. 41 வயதான இவர் பிஎஸ்சி, பிஎட் படித்துள்ளார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக அஜிகுமார் இறந்துவிட்டார். இதனால் வீட்டின் அருகே சிறிய கடை வைத்து நடத்தி வந்துள்ளார் ரமணி. இந்த நிலையில் ரமணி நேற்று காலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில்கிடந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்கள்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் எழுதிவைத்த உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது. அதில் “என்னுடைய கணவர் இறந்த பிறகு அரசு வேலை கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருணை மனு கொடுத்தேன். அப்போது அந்த மனுவில் இருந்து என்னுடைய செல்போன் எண்ணை எடுத்து அங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ஒருவர் என்னிடம் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் எனக்கு திருமணம் ஆகி விவகாரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறினார். இதனை நான் கண்மூடித்தனமாக நம்பினேன். இந்த நம்பிக்கையால் அவர் என்னிடம் நகை மற்றும் பணத்தை கொடுத்தார். சத்தியமாக உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்ற வாக்குறுதியும் கொடுத்தார். ஆனால் எனக்கு தெரியாமலேயே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். இதை அவரிடம் கேட்டால் அவருடைய உறவினர்கள் தகாத வார்த்தைகளால் பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள்.
இதனால் தற்கொலை முடிவு எடுக்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது. ரமணியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் அந்த கடிதத்தில், தாய், தந்தை, மகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், “அப்பா என்னுடைய பிள்ளையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். மனம் தாங்க முடியாமல் தான் இந்த முடிவு எடுக்கிறேன். நான் இறந்த பிறகு என் இறப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை வாங்கி கொடுங்கள். மகளே என்னை மன்னித்துவிடு. உன்னை நல்ல முறையில் வளர்க்க ஆசை. ஆனால் இவர்கள் என்னை தொந்தரவு செய்கிறார்கள். அதனால் என்னால் தாங்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில், சொத்து தகராறு காரணமாக சமூக வலைதள பிரபலமும் அழகுக்கலை நிபுணருமான நிஷா சவுகான்…
திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…