துபாயில் உள்ள அஜித் ரசிகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! நடிகர் அஜித்குமார் ஓட்டும் பிரத்யேகமான ரேஸ் காரில் பயணிக்கும் வாய்ப்பை துபாய் ஆட்டோட்ரோம் (Dubai Autodrome) அறிவித்துள்ளது. பிரபல நடிகர் மற்றும் கார் பந்தய வீரரான அஜித்குமார், துபாய் ஆட்டோட்ரோமில் நடத்தும் சிறப்பு சவாரியில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 87,408 (3,500 திர்ஹம்) செலுத்தினால், அஜித்குமார் ஓட்டும் அதிவேக Ferrari 488 Challenge ரேஸ் காரில் அவருக்கு அருகிலேயே அமர்ந்து இரண்டு சுற்றுகள் மைதானத்தைச் சுற்றி வரலாம்.
இந்த வாய்ப்பைப் பெற விரும்புபவர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன. பந்தயத்தில் பங்கேற்க உடல் தகுதி (Physical Fitness) அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பணம் செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…