“அஜித் ஓட்டும் Ferrari காரில் நீங்களும் போகலாம்” துபாய் கொடுத்த செம சான்ஸ்… டிக்கெட் விலை இவ்வளவு தான்…!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

துபாயில் உள்ள அஜித் ரசிகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! நடிகர் அஜித்குமார் ஓட்டும் பிரத்யேகமான ரேஸ் காரில் பயணிக்கும் வாய்ப்பை துபாய் ஆட்டோட்ரோம் (Dubai Autodrome) அறிவித்துள்ளது. பிரபல நடிகர் மற்றும் கார் பந்தய வீரரான அஜித்குமார், துபாய் ஆட்டோட்ரோமில் நடத்தும் சிறப்பு சவாரியில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 87,408 (3,500 திர்ஹம்) செலுத்தினால், அஜித்குமார் ஓட்டும் அதிவேக Ferrari 488 Challenge ரேஸ் காரில் அவருக்கு அருகிலேயே அமர்ந்து இரண்டு சுற்றுகள் மைதானத்தைச் சுற்றி வரலாம்.

இந்த வாய்ப்பைப் பெற விரும்புபவர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன. பந்தயத்தில் பங்கேற்க உடல் தகுதி (Physical Fitness) அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பணம் செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\