இன்னும் தேர்தலுக்கே வரல.. அதுக்குள்ள இவ்வளவு பயமா..? தேர்தலுக்கு முன்பே விஜய்க்கு ‘செக்’ வைத்த திருமா..!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாரதிய ஜனதா கட்சியை (BJP) நேரடியாக எதிர்க்கத் தயங்குவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இன்று  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கையில் பாஜக அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விஜய் ஏன் மௌனமாக இருக்கிறார் எனத் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். “இன்னும் தேர்தலுக்கே வரவில்லை; அதற்குள் இவ்வளவு பயந்தால் எதிர்காலத்தில் நீங்கள் என்ன அரசியல் செய்யப் போகிறீர்கள்?” என்று அவர் விஜய்யைப் பார்த்து அதிரடியாகக் கேள்வி எழுப்பினார்.

விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளில் தெளிவில்லை என்றும், பாஜக-வை எதிர்க்கத் தயங்குவது அவரது அரசியல் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் விமர்சித்தார். சில நடிகர்களும் அரசியல் வியூகிகளும் விஜய்யை பாஜக தலைமையிலான கூட்டணிக்குத் தள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்த திருமாவளவன், இது அவரது அரசியல் எதிர்காலத்தைச் சிக்கலாக்கும் என எச்சரித்தார்.