பெரும் அதிர்ச்சி..! காதலியை வேவு பார்க்க சிசிடிவி ஹேக்கிங்.. 12 ஆம் வகுப்பு மாணவனின் விபரீத செயல்…!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

அசாம் மாநிலம் ஸ்ரீபூமி பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது காதலியின் சம்மதம் இன்றி அவரது நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இதற்காக அந்தப் பெண் வசிக்கும் குடியிருப்பின் சிசிடிவி பாதுகாப்பு அமைப்பைத் தொழில்நுட்ப ரீதியாக ஹேக் செய்துள்ளார். கடந்த நவம்பர் 29 அன்று, அந்த மாணவர் அப்பகுதியில் நீண்ட நேரமாகச் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிவதை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அந்த மாணவனைப் பிடித்து விசாரித்ததோடு அவனது கைபேசியையும் சோதனையிட்டனர். அப்போது, அந்தப் பெண்ணின் வீட்டின் சிசிடிவி காட்சிகள் மாணவனின் மொபைலில் நேரடியாக (Live Stream) ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த மாணவனைப் பிடித்த பொதுமக்கள், அவரைத் தகுந்த ஆதாரங்களுடன் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் டிஜிட்டல் யுகத்தில் தனிநபர் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.