தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாரதிய ஜனதா கட்சியை (BJP) நேரடியாக எதிர்க்கத் தயங்குவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத் தணிக்கையில் பாஜக அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விஜய் ஏன் மௌனமாக இருக்கிறார் எனத் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். “இன்னும் தேர்தலுக்கே வரவில்லை; அதற்குள் இவ்வளவு பயந்தால் எதிர்காலத்தில் நீங்கள் என்ன அரசியல் செய்யப் போகிறீர்கள்?” என்று அவர் விஜய்யைப் பார்த்து அதிரடியாகக் கேள்வி எழுப்பினார்.
விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகளில் தெளிவில்லை என்றும், பாஜக-வை எதிர்க்கத் தயங்குவது அவரது அரசியல் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் விமர்சித்தார். சில நடிகர்களும் அரசியல் வியூகிகளும் விஜய்யை பாஜக தலைமையிலான கூட்டணிக்குத் தள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்த திருமாவளவன், இது அவரது அரசியல் எதிர்காலத்தைச் சிக்கலாக்கும் என எச்சரித்தார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…