கிருஷ்ணகிரி மாவட்டம் தேவதாசனபள்ளியைச் சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் ஓசூரில் தங்கித் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அண்மையில் தனது மனைவி ஹாசினி (30) மற்றும் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் ஆந்திராவிலுள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து கடந்த 14-ஆம் தேதி மல்லப்பா மலையிலுள்ள ஒரு ஆலயத்திற்கு வழிபடச் சென்ற ரமேஷ், நீண்ட நேரமாகியும் இல்லம் திரும்பாததால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நடத்திய தீவிர தேடுதலில், மலைக் கோயில் அருகே முட்புதருக்குள் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டறியப்பட்டது.
இதன் பின்னணி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஹாசினிக்கு அவரது சொந்த ஊரைச் சேர்ந்த யுகேந்தர் என்பவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பு இருந்ததும், அதனை ரமேஷ் கண்டித்ததால் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியதும் அம்பலமானது. அதன்படி, மலைப் பாதையின் மூன்றாவது வளைவில் ஹாசினி தனது கைப்பையைத் தவறிவிட்டதாக நாடகமாட, அதனை எடுக்கச் சென்ற ரமேஷை அங்கு மறைந்திருந்த யுகேந்தர் மற்றும் அவனது கூட்டாளிகள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர், ரமேஷின் இருசக்கர வாகனத்திலேயே குழந்தையுடன் தப்பியோடி, இரயில் நிலையம் மூலமாகத் தலைமறைவாகியுள்ள அந்தப் பாதகக் கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…