100 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்…! தமிழ்நாட்டில் போலீஸ் காலடி கூட படாத ஊர் எது தெரியுமா…? அங்கு இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கா…?

Spread the love

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள சக்கிமங்கலம் பகுதியில் ‘ஒத்தவீடு’ என்ற தனித்துவமான கிராமம் ஒன்று அமைந்துள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலத்திலிருந்து வந்த மூன்று குடும்பங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஊர், இன்று வரை பல வியக்கத்தக்க கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருகிறது.

இந்த கிராமத்தில் எந்த ஒரு பொது இடத்திலோ அல்லது சுவர்களிலோ அரசியல் விளம்பரங்கள் செய்யவோ, நோட்டீஸ் ஒட்டவோ யாருக்கும் அனுமதி கிடையாது. தங்கள் ஊரின் தூய்மையையும் அமைதியையும் காக்க முன்னோர்கள் விதித்த இந்த விதியை, இளைய தலைமுறையினரும் இன்று வரை ஒரு பாரம்பரியமாகப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர்.

இக்கிராமத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இங்குள்ள மக்கள் தங்களுக்குள் ஏற்படும் குடும்பப் பிரச்சனைகள் அல்லது பொதுவான மோதல்களைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்வதே இல்லை. ஊரின் நுழைவாயிலில் உள்ள அரச மரத்தடியில் பெரியவர்கள் முன்னிலையில் பேசி, சுமுகமாகப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

இதனால் நூறு ஆண்டுகால வரலாற்றில் இதுவரை ஒரு போலீஸ்காரர் கூட விசாரணைக்காக இந்த ஊருக்குள் நுழைய வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. ஒற்றுமையே பலம் என்பதை உலகுக்குக் காட்டும் இந்த கிராமத்தின் கட்டுப்பாடு, நவீன காலத்திலும் மாறாமல் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

இனி எந்த தப்பும் நடக்காது..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி.. அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்,…

3 minutes ago

BREAKING: மாணவர்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு… 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு..!

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9:30 மணிக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக…

6 minutes ago

“என்னை உறுப்பினரா சேர்த்துக்கோங்க” OPS-ஐ கெஞ்ச வைத்த கொடுமை… EPS செய்த பாவம்… உண்மையை போட்டுடைத்த சிவி சண்முகம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்த…

8 minutes ago

200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது அமல்..? அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட குட் நியூஸ்..!!

தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின்சார…

12 minutes ago

அதெல்லாம் பொய்… பாருங்க விஜய் அசால்ட் காட்டுவார்… விஜய் ஆட்சியைப் பிடித்த ரகசியம்.. உடைத்த முன்னாள் போலீஸ் அதிகாரி..!!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சராகப் பதவியேற்றது முதல் சி.எம். விஜய்யின் செயல்பாடுகளுக்கு…

16 minutes ago

கரூர் துயர சம்பவம்: கூண்டோடு மாறிய காவல்துறை… அதிரடி ஆக்ஷனில் தவெக அரசு..!!

கரூர் மாவட்டத்தில் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட 19 காவலர்கள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர்…

22 minutes ago