திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் (21) என்பவரும், ஜோலார்பேட்டை அடுத்த ராமனுூரைச் சேர்ந்த திவ்யஜேஸ்ரீ (20) என்பவரும் ஓசூரில் உள்ள தனித்தனிக் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழெமை விடுமுறை நாளான நேற்று பிரதீப் தான் தங்கியிருந்த அறைக்கு திவ்யஜேஸ்ரீயை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பிரதீப், காதலி திவ்யஜேஸ்ரீயை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து சாலைக்கு ஓடிவந்த அவர், அவ்வழியாக வந்த லாரி முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதில் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து வந்த பாகலூர் போலீசார், படுகாயமடைந்த பிரதீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திவ்யஜேஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…
நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த தகவல்களும், அவருடைய தற்போதைய நகர்வுகளும் தமிழக அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.…
பிரேமர்ஹேவன் துறைமுகத்தில் கடுமையான புயல் காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக, 'மைன் ஷிஃப் 3' என்ற பிரம்மாண்ட சொகுசுப்…
மும்பை சென்ட்ரல் ரயில்வே பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மின்கம்பி பழுது காரணமாக உள்ளூர் மின்சார ரயில்கள் தாமதமாக…
கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வர்ஸ்ரீ ஹெக்டே என்ற இரண்டு வயது மற்றும் 10 மாதங்களே ஆன பெண் குழந்தை, தபாவில் 12…
கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், 14 வயது சிறுமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி, 26…