சத்தீஸ்கர் மாநிலத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கிய கணவன், அவர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து அடர்ந்த காட்டுக்குள் விட்டுச் சென்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரியா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முதல் கணவர் மற்றும் குழந்தையைப் பிரிந்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ராகேஷ் சாகு என்பவரைக் காதலித்து இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ராகேஷ், அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி மனைவியைப் பத்ரா வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற ராகேஷ், அங்கு அவரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் உருட்டுக்கட்டையாலும் கைகளாலும் மனைவியை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதிய ராகேஷ், அவரை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். பின்னர், அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அப்பெண்ணின் முதல் கணவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். மேலும், கடந்த ஆறு மாதங்களாகக் காணாமல் போன தனது மனைவியைக் கண்டுபிடித்து தருமாறு அவர் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய ராகேஷ் சாகு மீது வழக்குப் பதிவு செய்துள்ள சூரஜ்பூர் மாவட்டப் போலீசார், தலைமறைவாக உள்ள அவரைக் கைது செய்யத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை சென்ட்ரல் ரயில்வே பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மின்கம்பி பழுது காரணமாக உள்ளூர் மின்சார ரயில்கள் தாமதமாக…
கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வர்ஸ்ரீ ஹெக்டே என்ற இரண்டு வயது மற்றும் 10 மாதங்களே ஆன பெண் குழந்தை, தபாவில் 12…
கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், 14 வயது சிறுமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி, 26…
ஹைதராபாத் ஃபதேநகர் ரயில் நிலையம் அருகே எல்பிஎஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு பகலாகக் கஞ்சா விற்பனை நடைபெற்று…
அக்டோபர் 24 அன்று எடுலாபாத்தில் அமைந்துள்ள 'லிவின்' பண்ணை வீட்டிற்கு கிருஷ்ணா கவுண்டின்யா என்ற இளைஞர் சென்றுள்ளார். தனது நெருங்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோடா நகரின் காயத்ரி நகர் பகுதியில் 11,000 வோல்ட் உயர் மின்னழுத்த மின்கம்பி…