“நடுராத்திரியில் அதிரடி கைது”…. ரூ.100 கோடி பள்ளி மோசடி வழக்கில் சிக்கிய அன்பில் மகேஷ்…. எங்கே A2 முத்துக்குமார்?…. பரபரப்பு தகவல்….!

Spread the love

தனியார் பள்ளிகளுக்குப் போலி சான்றிதழ்கள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ₹100 கோடிக்கும் அதிகமாக முறைகேடு செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி (DTCP) அனுமதிகளை வழங்கி தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாகப் பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி சங்க தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டமும் பாயப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு, சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அரசகுமாரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களின் பேரிலேயே, அன்பில் மகேஷ் மீது குற்றப்பிரிவு போலீஸார் முதன்மை வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்பில் மகேஷுக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்களும் பென்டிரைவ்களும் கைப்பற்றப்பட்டன. பின்னர் செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், அவரிடம் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக 240-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே கைது நடவடிக்கையிலிருந்து தப்ப அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்ஜாமீன் மனு விசாரணையின் போது, இந்த வழக்கின் ஏ2 குற்றவாளியான முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை அன்பில் மகேஷ்தான் தலைமறைவாக இருக்க உதவி செய்து பாதுகாத்து வருகிறார் என்று காவல்துறை தரப்பில் பலத்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அமைந்தகரையில் உள்ள திமுக எம்பி வில்சனின் அலுவலகத்தில் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அன்பில் மகேஷை சிசிபி போலீஸார் நேரில் சென்று அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது, தலைமறைவாக உள்ள ஏ2 குற்றவாளி முத்துக்குமார் எங்கே இருக்கிறார் என்பது குறித்தே முதன்மை கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது. மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

Nanthini

Recent Posts

வீட்டுக்கு நாளைக்குத்தான் வருவேன்… ரயில் உடல்நலம் சரியில்லாமல் போச்சு… மும்பை ரயில்கள் தாமதத்தால்… இணையத்தில் கலக்கும் நகைச்சுவை கமெண்ட்கள்…!

மும்பை சென்ட்ரல் ரயில்வே பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மின்கம்பி பழுது காரணமாக உள்ளூர் மின்சார ரயில்கள் தாமதமாக…

12 minutes ago

அம்மாடியோ… 2 வயது சிறுமியின் செயலால்… அதிர்ச்சியில் உறைந்த இணையவாசிகள்… கர்நாடகாவில் நடந்த சம்பவம்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வர்ஸ்ரீ ஹெக்டே என்ற இரண்டு வயது மற்றும் 10 மாதங்களே ஆன பெண் குழந்தை, தபாவில் 12…

19 minutes ago

அடக்கடவுளே… சட்டத்தை கையில் எடுத்த கொடூரம்… தந்தையும் மகனும் நிர்வாணமாக வீதியில் ஊர்வலம்… கொல்கத்தாவை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், 14 வயது சிறுமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி, 26…

29 minutes ago

யாருக்கு சந்தேகம் வரப்போகுது?… பாட்டி செஞ்ச வேலை… 75 வயதில் தினமும் ரூ 1 லட்சத்துக்கு கஞ்சா பிசினஸ்… ஹைதராபாத்தில் அதிர்ச்சி பின்னணி..!

ஹைதராபாத் ஃபதேநகர் ரயில் நிலையம் அருகே எல்பிஎஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு பகலாகக் கஞ்சா விற்பனை நடைபெற்று…

54 minutes ago

மச்சி… கேக் வெட்டிட்டு உடனே வந்துடுறேன்?… பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த விபரீதம்… பண்ணை வீட்டில் சோகம்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

அக்டோபர் 24 அன்று எடுலாபாத்தில் அமைந்துள்ள 'லிவின்' பண்ணை வீட்டிற்கு கிருஷ்ணா கவுண்டின்யா என்ற இளைஞர் சென்றுள்ளார். தனது நெருங்கிய…

60 minutes ago

அடக்கடவுளே மனுஷனுக்கு சாவு இப்படியா வரணும்?….. மூன்றாவது மாடியில் குட்கா துப்ப முயன்ற 65 வயது முதியவர்… அடுத்த நிமிடம் நடந்த கொடூர விபத்து….!

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோடா நகரின் காயத்ரி நகர் பகுதியில் 11,000 வோல்ட் உயர் மின்னழுத்த மின்கம்பி…

1 மணத்தியாலம் ago