வடகிழக்கு பருவ மழையால் சில வாரங்களாக காய்கறிகள் வரத்து குறைந்து காணப்படுகிறது. காத்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் மாலை அணிந்து விரதம் இருப்பதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. மேலும் முகூர்த்த தினங்களும் இந்த மாதத்தில் அதிகமாக உள்ளன. இதனால் வழக்கத்தை விட தற்போது காய்கறிகள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடலூரில் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்து அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்தது. அதனால் கடலூரில் காய்கறிகளின் விலை கடும் உயர்வை சந்தித்தது. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் சாலக்கரையில் உள்ள ஒரு காய்கறி கடைக்காரர் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை என அறிவித்தார். இந்த தகவலை கேள்விப்பட்ட மக்களும் போட்டி போட்டுக் கொண்டு கடை முன் குவிந்துவிட்டனர். ஏனென்றால் இப்போது தக்காளி கிலோ 60 ரூபாய் வரை உள்ளது.
கடைக்கு முன்பு திரண்ட மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு டோக்கன் விநியோகிக்கப்பட்டு தக்காளி விற்பனை நடந்தது. தக்காளி விலை ஏற்றதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தனது லாபத்தை குறைத்துக்கொண்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கடைக்காரர் கூறினார் .குறைந்த விலை காரணமாக ஒரு மணி நேரத்தில் அந்த கடையில் இருந்த 1 டன் தக்காளி விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…