கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்தவர்கள் கவனத்திற்கு… திருச்சியில் பதற வைத்த நள்ளிரவு சம்பவம்..!!!

Spread the love

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடிக்க மர்ம நபர்கள் நள்ளிரவில் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த மார்ச் 3-ஆம் தேதி இரவு வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகளைத் துண்டித்ததுடன், நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகங்களை உடைக்க நீண்ட நேரம் முயற்சி செய்துள்ளனர்.

இருப்பினும், லாக்கரைத் திறக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். தங்களது அடையாளங்கள் மற்றும் தடயங்களை மறைப்பதற்காக கொள்ளையர்கள் வங்கி முழுவதும் மிளகாய் பொடியைத் தூவிச் சென்றதுடன், சிசிடிவி கேமராக்களின் ஹார்டு டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதனால் மறுநாள் காலை வங்கி ஊழியர்கள் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மாவட்ட எஸ்.பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rajeshwari

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

3 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

3 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

3 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

4 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

5 மணத்தியாலங்கள் ago