கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி தொழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மனைவி ராதா மற்றும் இரு மகன்கள் உள்ளனர். கண்ணன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் கௌசிக் (12), தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு தயாரான கௌசிக் ஷூவுக்குள் காலை விட்ட போது ஏதோ கடித்துள்ளது. கௌசிக் கத்திக் கொண்டே மயங்கி விழுந்துள்ளார்.
சிறுவனின் தாய் மயங்கி விழுத குழந்தையை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். முதல் சிகிச்சை பெற்று பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பியுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்ததில் சிறுவன் ஷூவுக்குள் சாரைப்பாம்பு குட்டி ஒன்று இருந்துள்ளது. அதை கவனிக்காமல் அணிந்த சிறுவனின் காலை பாம்பு தீண்டியுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிகக் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண் ஊழியர் மீது, கடந்த மாதம்…
செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவரும் அதே வேளையில், அவற்றின் தகவல்களைக்…
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிப்பாண்டி (32). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கும் மாரியம்மாள் என்பவருக்கும்…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு தவெக அரசு பொறுப்பாகாது என்று…
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 என்ற போயிங் 777 ரக விமானம், அக்டோபர் 5, 2026 அன்று லண்டன் ஹீத்ரோ…
சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு…