பள்ளியிலிருந்து ஆசையாக வீடு திரும்பிய +2 மாணவன்… செல்லும் வழியில் காத்திருந்த எமன்.. சோக சம்பவம்…!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள சங்கமேரி நடுத்தெரு பகுதி சேர்ந்தவர் துரை, இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மகன் நல்லமுத்து (17), ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் காலை நல்லமுத்து பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் பஸ்ஸில் தங்கநெறி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். பேருந்து நிலையத்திலிருந்து நல்லமுத்து வீட்டிற்கு சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். வீட்டிற்கு நடந்து சென்றிருந்த பாதி வழியிலேயே தலைச்சுற்றல் ஏற்பட்ட மயங்கி விழுந்துள்ளார்.

அக்கம் பக்கத்தில் இருந்தோர்  நல்லமுத்துவை தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஓபன் ஹார்ட் சர்ஜரி நல்லமுத்துவுக்கு செய்ததாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மற்றும் பள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Divyamayakannan

Recent Posts

அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா?… நகைக் பேராசையால் மனைவியை… கழுத்து நெரித்துக் கொன்று… கணவன் ஆடிய பயங்கர நாடகம்… கர்நாடகாவை உலுக்கிய சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோளியைச் சேர்ந்த 32 வயதான அர்ச்சனா என்ற பெண், குடும்பத் தகராறு காரணமாக அவரது…

5 minutes ago

திக் திக்… பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்க சென்ற… இந்தியன் ஆயில் மேலாளர் கொடூரமாக அடித்துக் கொலை… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!

இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மேலாளர் மகேஷ் ஷெல்கே, மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்…

20 minutes ago

“117 எம்.எல்.ஏ-க்கள் கணக்கு”…. மெஜாரிட்டிக்கு போட்ட பிளான்… கசிந்த தவெக மேலிட ரகசியம்…. கடைசி நேரத்தில் மாறிய ட்விஸ்ட்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆளும்கட்சியான…

48 minutes ago

தவெக ஆட்சிக்கு திடீர் ஆபத்து?சத்தமே இல்லாம தூக்க பிளான்…. திருமாவளவன் போட்ட போடு…. உளவுத்துறை அறிக்கையால் அதிர்ச்சியில் முதல்வர் விஜய்….!

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், அந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக ரகசியத் திட்டம்…

59 minutes ago

பெட்ரோல் ஊற்றி கொடூரம்… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராஜேஸ்வரி…. 16 நாள் போராட்டம் வீண்… பொன்னேரி அரசு மருத்துவமனை கொடூரம்….!

பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிகக் கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண் ஊழியர் மீது, கடந்த மாதம்…

1 மணத்தியாலம் ago

AI சொன்ன வழியைக் கேட்ட சிறுவன்… ‘சுடுகாட்டுப் பாதை’ மரணப் பள்ளத்தில் நின்ற அதிர்ச்சி சம்பவம்…. இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…..!

செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டுகள் நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவரும் அதே வேளையில், அவற்றின் தகவல்களைக்…

1 மணத்தியாலம் ago