Categories: சினிமா

நம்ம ஊருல இதெல்லாம் நெனச்சா அசிங்கமா இருக்கு..  அப்படி எத சொல்றாரு ஏ ஆர் ரஹ்மான்!

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கோபிநாத்துக்கு அளித்த ஒரு நேர்காணலில் மனம் திறந்து பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் “வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு இந்தியா வந்து பார்த்தால் வீட்டுக்கு வெளியே ஏசியை வைத்துள்ளார்கள். அதில் இருந்து ஒரு ட்யூப் தொங்குகிறது. அதில் இருந்து தண்ணீர் சொட்டுகிறது. அதைப் பார்த்தால் அசிங்கமாக உள்ளது.

நாம் நம்மிடம் இருந்த இயற்கையை எல்லாம் அழித்துவிட்டோம். இயற்கை இல்லை என்றால் எப்படி கலை வரும், ரவி வர்மா போன்றவர்கள் எல்லாம் இயற்கையைக் கொண்டுதான் ஓவியம் வரைந்தார்கள். இப்போது எங்கே இருக்கிறது இயற்கை? நாம் சமூகத்துக்கு எதாவது கொடுக்கவேண்டும்? எப்போதும் பிறர் தோண்டி வைத்த கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்துக் கொண்டு இருக்கிறோம்?” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

6 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

9 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

11 minutes ago

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

24 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

26 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

26 minutes ago