Categories: சினிமா

சத்தம் இல்லாமல் திருமணத்தை முடித்த பாடகர் தெருக்குறல் அறிவு… திருமணம் முடித்த உடன் செய்த முதல் செயல்…

Spread the love

தெருக்குரல் அறிவு என அழைக்கப்படும் அறிவரசு கலைநேசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இந்திய சொல்லிசை பாடல் ஆசிரியர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். அனிருத் இசையமைப்பில் மாஸ்டர் படத்திற்காக இவர் எழுதிய “வாத்தி ரெய்டு” பாடல் மற்றும் பாடகி “தீ” யுடன் இவர் இணைந்து பாடிய ஆல்பம் பாடலான “என்ஜாயி என்ஜாமி” ஆகிய இந்த பாடல்ளின் மூலம் பிரபலமானவர் அறிவு.

சென்னை அரக்கோணம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர் அறிவு. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தொலைக்காட்சி வானொலி போன்றவை இல்லாமல் அவர் பெற்றோர் இவரை வளர்த்தனர். அதனால் இவர் நாட்டுப்புற பாடல்களின் தாக்கத்திற்கு உட்பட்டார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே சாதி, வறுமை பற்றிய கவிதைகள் எழுத தொடங்கினார் அறிவு. கல்லூரி காலத்தில் இவருக்கு அதன் பற்று அதிகமானது.

கல்லூரியில் எம்பிஏ படிக்கும்போது அறிவு பா ரஞ்சித்தை சந்தித்தார். அப்போது அவர் காலா படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். கல்லூரி படிப்பை முடித்த பின்பு அறிவு பா. ரஞ்சித்தின் இசைக்குழுவான “தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்” அதில் இணைந்தார். பின்னர் தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியதோடு பல சுயாதீன நாட்டுப்புற பாடல்கள் மாதிரியான பாடல்களை எழுதி பாட ஆரம்பித்தார் அறிவு.

இசை தயாரிப்பாளர் ஆபிரோ உடன் இணைந்து தனது பாடல்களை ஒரு தொகுப்பாக “தெருக்குரல்” என்ற பெயரின் கீழ் எழுதினார். இது மிகப் பிரபலமானது. காலா, வடசென்னை, நாடோடிகள் 2 போன்ற திரைப்படங்களுக்கு இவர் பாடல்களை எழுதியும் இருக்கிறார் அதன் மூலம் புகழ்பெற்றார் அறிவு.

இந்நிலையில் இன்று சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட தெருக்குரல் அறிவு திருமாவளவன் முன்னிலையில் திருமணம் முடிந்த கையோடு முதன்முதலாக அம்பேத்காரின் ஜெய் பீம் என்ற ராப் பாடலை பாடினார். அவருடன் இணைந்து திருமாவளனும் பாடினார். அவரிடம் ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டார் தெருக்குரல் அறிவு.

admin

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

10 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

10 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

10 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

11 மணத்தியாலங்கள் ago