தெருக்குரல் அறிவு என அழைக்கப்படும் அறிவரசு கலைநேசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் இந்திய சொல்லிசை பாடல் ஆசிரியர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். அனிருத் இசையமைப்பில் மாஸ்டர் படத்திற்காக இவர் எழுதிய “வாத்தி ரெய்டு” பாடல் மற்றும் பாடகி “தீ” யுடன் இவர் இணைந்து பாடிய ஆல்பம் பாடலான “என்ஜாயி என்ஜாமி” ஆகிய இந்த பாடல்களின் மூலம் பிரபலமானவர் அறிவு.

சென்னை அரக்கோணம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர் அறிவு. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தொலைக்காட்சி வானொலி போன்றவை இல்லாமல் அவர் பெற்றோர் இவரை வளர்த்தனர். அதனால் இவர் நாட்டுப்புற பாடல்களின் தாக்கத்திற்கு உட்பட்டார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே சாதி, வறுமை பற்றிய கவிதைகள் எழுத தொடங்கினார் அறிவு. கல்லூரி காலத்தில் இவருக்கு அதன் பற்று அதிகமானது.
கல்லூரியில் எம்பிஏ படிக்கும்போது அறிவு பா ரஞ்சித்தை சந்தித்தார். அப்போது அவர் காலா படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். கல்லூரி படிப்பை முடித்த பின்பு அறிவு பா. ரஞ்சித்தின் இசைக்குழுவான “தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்” அதில் இணைந்தார். பின்னர் தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியதோடு பல சுயாதீன நாட்டுப்புற பாடல்கள் மாதிரியான பாடல்களை எழுதி பாட ஆரம்பித்தார் அறிவு.
இசை தயாரிப்பாளர் ஆபிரோ உடன் இணைந்து தனது பாடல்களை ஒரு தொகுப்பாக “தெருக்குரல்” என்ற பெயரின் கீழ் எழுதினார். இது மிகப் பிரபலமானது. காலா, வடசென்னை, நாடோடிகள் 2 போன்ற திரைப்படங்களுக்கு இவர் பாடல்களை எழுதியும் இருக்கிறார் அதன் மூலம் புகழ்பெற்றார் அறிவு.

இந்நிலையில் இன்று சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட தெருக்குரல் அறிவு திருமாவளவன் முன்னிலையில் திருமணம் முடிந்த கையோடு முதன்முதலாக அம்பேத்காரின் ஜெய் பீம் என்ற ராப் பாடலை பாடினார். அவருடன் இணைந்து திருமாவளவனும் பாடினார். அவரிடம் ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டார் தெருக்குரல் அறிவு.
View this post on Instagram
