தென்னிந்திய திரை உலகில் ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உள்ளவர் தான் ஜோசுவா ஸ்ரீதர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் மூலமாக தான் இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை இசையமைப்பாளராக பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவரைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் இசையமைத்த பாடல் கூட என்ன என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
அந்த அளவிற்கு சினிமாவில் சத்தம் இல்லாமல் சாதனை படைத்த மனிதர். 19 வயதிலேயே காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட இவர் 20 வயதில் ஒரு குழந்தைக்கு அப்பாவானார். திருமணத்திற்குப் பிறகு 1993 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இவர் அதுவரை ஸ்ரீதர் ஆக இருந்தவர் ஜோஸ்வா ஸ்ரீதர் ஆக மாறினார். 2004 ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திலிருந்து வெளியேறி இந்துவாக வாழ்ந்து வருகின்றார். பின்னர் பார்த்தாலே பரவசம், Lagaan, காதல் வைரஸ் மற்றும் பாய்ஸ் என தொடர்ந்து மூன்று வகை ஆண்டுகள் ரகுமானின் 15 படங்களில் பல பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் கீபோர்டு வாசித்தார்.
அதே சமயத்தில் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா உள்ளிட்ட இசை அமைப்பாளர்களோடு இணைந்தார். பிறகு தான் காதல் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. காதல் படத்தில் இடம் பெற்ற, தொட்டு தொட்டு உன்னை, உனக்கென இருப்பேன் , அவன் பார்த்ததுமே நான் பூத்து விட்டேன் ஆகிய பாடல்கள் அனைத்தும் இவருடைய இசையில் உருவானது தான்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “இளையராஜாவுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் தான். ஐயராஜாவின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பெரிய இசை மேதை ஏ.ஆர் ரகுமான் தான். இவங்க ரெண்டு மியூசிக்கும் என்ன வித்தியாசம் என்றால் இளையராஜா மியூசிக் மேலிருந்து விழும் ஒரு அருவி போல ஒரு flow ஆக இருக்கும். ஏ.ஆர் ரகுமான் இசை அருவி கீழே கொட்டி நதி போல இருக்கும். ஏ.ஆர் ரகுமான் 90ஸ் மியூசிக் ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.