தென்காசி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர், தனது மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட கோர விபத்தில் உயிரிழந்தார். கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்தபோது, மதுரையை நோக்கிச் சென்ற கார் இவர்களது வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நான்கு பேரும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் காவலர் கண்ணன் மற்றும் அவரது 5 வயது மகன் ராம் கிரிஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். கண்ணனின் மனைவி செல்வராணி மற்றும் 6 மாதக் குழந்தையான ராம் கிரிடிக் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தத் துயரச் சம்பவம் குறித்து இடைகால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…