டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுச் சம்பவங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. தலைநகர் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக இளைஞர்களும் மாணவர்களும் திரண்டு தொடர்ந்து தங்களது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். நியாயமான விசாரணை மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கக் கோரி நடக்கும் இப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் நேரில் வர முடியாவிட்டாலும் ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த ஒரு நபர், டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடிக் கொண்டிருக்கும் சி.ஜே.பி இளைஞர்களுக்காக ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து அனுப்பித் தனது விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
தொலைதூரப் பகுதியில் இருந்துகொண்டே போராட்டக்களத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உணவளித்து ஆதரவு கரங்களை நீட்டும் இந்த இணையவழிப் போக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போராட்டக்காரர்களின் பசியைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், தங்களின் கோரிக்கைகளுக்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு இருக்கிறது என்பதை உணர்த்தி இளைஞர்களுக்கு இது பெரும் உற்சாகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…