கிர் மாடு வளர்ப்பில் அதிக லாபம்… மாதம் 2 லட்சம் வருவாய் ஈட்டும் கன்னியாகுமரியை சேர்ந்த நபர்…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் நன்றாக படித்து ஏசி ரூமில் இருந்து வேலை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். விவசாயத்தையும் அதை சார்ந்த தொழில்களையும் யாரும் விரும்பவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பார்க்க போனால் விவசாயமும் அதை சார்ந்த தொழில்களுக்கும் மவுசு அதிகரித்துவிட்டது என்று சொல்லலாம். சரியான முறையில் செய்யும்போது இதில் வருமானம் ஈட்ட முடியும். அந்த வகையில் மாடு வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டி வருகிறார் கன்னியாகுமரியை சேர்ந்த நபர். இவர் கிர் மாடு வகையை வளர்த்து வருகிறார். அதன் விவரங்களை பற்றி இனி காண்போம்.

இந்தியாவில் பல்வேறு மாடுகள் இனங்கள் வளர்க்கப்பட்டாலும் கலப்பின மாடுகள் இருக்கிறது. இதில் கிர் மாடு என்பது இந்தியாவின் நாட்டு மாட்டு வகைகளில் ஒன்று. இது உருவில் பெரியதாகவும் மனதர்களிடம் பழகுவதற்கு எளிதாகவும் இருக்கும். இந்த வகை மாடுகள் குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த வகை மாடுகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பசுக்களை கோசலை அமைத்து வளர்த்து வரும் கோலப்பபிள்ளை என்பவர் இந்த கிர் வகை மாடுகளையும் சேர்த்து வளர்த்து வருகிறார்.

இந்த கிர் வகை மாடு வளர்ப்பு பற்றி கோலப்பைபிள்ளை கூறுகையில், நான் மத்திய அரசின் போலீஸ் படையில் உதவி ஆய்வாளராக 30 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு சிறுவயதிலிருந்து மாடுகள் வளர்ப்பதில் அதிக விருப்பம் உண்டு. வட மாநிலங்களில் பணிபுரியும் போது அங்கு கிர் மாடுகளின் பால் உணவுகளை சாப்பிட்டிருக்கிறேன். அது மிகவும் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்ததாகவும் இருக்கும். அதனால் எனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் கிர் மாடுகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து வளர்த்து வருகிறேன்.

தற்போதைய காலகட்டத்தில் மூன்று மாடுகளை வைத்தே மாதம் 50000 வரை வருமானம் ஈட்ட முடியும். மாடுகளை வைத்து தினசரி 500 ரூபாய் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் அதிகம் இருக்கிறது. மாடுகளில் இருந்து பால் மட்டுமே விற்பனை செய்யாமல் பால் மூலம் செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மாட்டு சாணத்தில் இருந்து இயற்கை எரிவாயு ஊதுபத்தி திருநீறு கிருமி நாசினி என பல பொருட்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறுகிறார் கோப்பிள்ளை.

மேலும் அவர், நான் வளர்க்கும் கிர் மாடு என்பது மாடுகளின் பெயர் கிடையாது. அது வளர்ந்த கிர்காடுகளின் பெயரை வைத்து கிர் மாடு என பெயர் வந்தது. பண்டைய காலத்தில் ராஜாக்கள் இந்த மாடுகளை தான் போட்டி போட்டு வளர்த்தார்கள். இந்த மாடுகளின் பால் மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்டு வந்தார்கள். இது மிகவும் சத்தானது என்று கூறப்படுகிறது. இந்த கிர் மாடுகளின் பால் அவ்வளவு எளிதாக கிடைக்காது. இந்த வகை மாடுகளில் கிடைக்கும் ஏ2 புரோட்டீன் பால் மிகவும் சுத்தமானதாக ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

நான் இது போல தான் மாடுகளின் பொருட்களை எல்லாம் சேர்த்து உற்பத்தி செய்து விற்பனை செய்கிறேன். நான் எனது கோசாலையில் கிர் மாடுகளுடன் 50 பசு மாடுகளை வைத்து பராமரித்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு மாதம் இரண்டு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்று கோப்பிள்ளை தெரிவித்திருக்கிறார். என்னை போல எல்லோரும் இந்த மாடு வளர்ப்பு தொழிலில் தாராளமாக பயப்படாமல் இறங்கலாம் என்றும் அறிவுரை கூறுகிறார்.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago