அமெரிக்காவில் உணவகங்களில் இருந்து ‘டோர் டேஷ்’ செயலி வழியாக உணவு ஆர்டர் செய்தால், மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் மூலமாக உணவு விநியோகிக்கப்படும் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பயனர் ஒருவர், அமெரிக்காவில் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தி உணவைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆனால் இத்தகைய தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகமானால் முதல் ஆர்டரிலேயே ரோபோவே காணாமல் போய்விடும் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.
இப்பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்குத் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ரோபோக்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் அவற்றை யாரும் சேதப்படுத்தவோ திருடவோ முடியாது என்று சிலர் விளக்கமளித்தனர். அதேவேளையில், எந்தவொரு நவீன தொழில்நுட்பமும் வெற்றிபெற மக்களின் நேர்மையும் பொறுப்புணர்வும் மிக முக்கியம் என்றும், மக்களின் எண்ண ஓட்டமே நாட்டின் வளர்ச்சிக்கும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கும் முக்கியக் காரணியாக அமைகிறது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…