நவி மும்பையின் ‘அடல் சேது’ (மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்) பாலம் அருகே கடல்நாய் (Seal) போன்றதொரு விலங்கு நடமாடுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, தற்போது இணையவாசிகள் இடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உல்வே பகுதியில் கடல் உள்வாங்கிய நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் இது ஒரு கடல்நாய் என்று பதிவிடப்பட்ட போதிலும், மும்பையின் வெப்பமண்டலக் தட்பவெப்பநிலையில் கடல்நாய் உயிர்வாழ்வது சாத்தியமில்லை என்றும், உற்று நோக்கினால் அது நீர்நாய் போலவே இருப்பதாகவும் பல இணையவாசிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DaI6E2dINSh/?utm_source=ig_embed&ig_rid=A5BS3BNspcX5u4DsRCBesQc
உண்மையில், இந்த வீடியோவில் காணப்படுவது மும்பை மற்றும் நவி மும்பை கடலோர சதுப்புநிலக் காடுகளில் பரவலாக வாழக்கூடிய ‘வழுவழுப்பான நீர்நாய் என்று பல வனவிலங்கு ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நன்னீர் நிலைகள், சதுப்புநிலங்கள் மற்றும் முகத்துவாரங்களில் வாழும் இந்த நீர்நாய்கள், ஏற்கனவே நவி மும்பையின் பல்வேறு பகுதிகளில் தென்பட்டுள்ளன. மிக அரிதாக குளிர்ந்த நீர்நிலைகளில் மட்டுமே காணப்படும் கடல்நாய்கள், மும்பை போன்ற கடலோரப் பகுதிகளில் காணப்பட வாய்ப்பில்லை என்பதால், இந்த வைரல் வீடியோவில் இருப்பது நீர்நாய் தான் என்ற வாதம் வலுவடைந்துள்ளது. எனினும், இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…
திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…