ரூ. 23 லட்சத்தில் இருந்து ரூ. 6.86 கோடி சொத்து?… அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து வழக்கு:…. சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!

Spread the love

முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் முடக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் “தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2001-2006 காலகட்ட அதிமுக ஆட்சியில் கால்நடை மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ. 23.36 லட்சத்தில் இருந்து ரூ. 6.86 கோடியாக உயர்ந்ததாகக் கூறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2020 டிசம்பரில் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து, அவருக்குச் சொந்தமான 18 அசையா சொத்துக்களை முடக்கியது.

இந்த சொத்து முடக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மதுரையில் உள்ள 17 சொத்துகளின் முடக்கத்தை நீக்கியும், ஒரே ஒரு சொத்தின் முடக்கத்தை மட்டும் உறுதி செய்தும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அமலாக்கத்துறையின் இந்த சொத்து முடக்கம் சட்டவிரோதமானது என்றும் தீர்ப்பாயம் குறிப்பிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவானது தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில், சொத்துகளின் மதிப்பு சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என்று தீர்ப்பாயம் கருதினால், அதை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டுமே தவிர, முடக்கத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்திருக்கக் கூடாது என வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Nanthini

Recent Posts

முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கண் அசைவு… கோபத்தின் உச்சத்துக்கே சென்ற CM விஜய்… அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு இதுதான் காரணமா…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…

3 minutes ago

“விஜய் தான் CM.. ஆனா பின்னால இருந்து இயக்குறது இவரா?”…. அண்ணா அறிவாலயத்தில் வெடித்த எழிலரசன்… தமிழக அரசியலை உலுக்கும் பரபரப்பு….!

தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான…

3 minutes ago

BREAKING: சம்பளம் உயர்ந்தது.. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு… அரசு ஊழியர்களுக்கு வந்த செம ஹேப்பி நியூஸ்….!

தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு…

10 minutes ago

“உன் மேல எனக்கு ஆசையா இருக்கு”… 13 வயது சிறுமியை ஏமாற்றி சீரழித்த 2 குழந்தைகளின் தந்தை… இறுதியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…

18 minutes ago

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

28 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

35 minutes ago