கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

Spread the love

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பேருந்தில் பயணித்த இரு பெண்களின் சமயோஜித புத்தியால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒக்கல் பகுதியில் லாட்டரி கடை நடத்தி வரும் சினோஜ் என்பவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால், காலடி எம்சி சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரது கார் சிக்னலில் சிக்கியபோது, வலி தாங்க முடியாமல் சினோஜ் காரினுள்ளேயே நிலைகுலைந்து சரிந்துள்ளார்.

https://threesocieties.com/Kerala:-Breath-was-fading-amidst-a-traffic-jam-when-two-nurse-angels-stepped-off-a-bus-they-saved-a-mans-life-by-administering-CPR

காரைச் சுற்றி திடீரென மக்கள் கூடியதைக் கண்ட அதே சாலையில் KSRTC பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த அங்கமாலி எல்.எஃப் மருத்துவமனை செவிலியர் அஞ்சலி பைஜு மற்றும் பெங்களூருவில் செவிலியர் பயின்று வரும் ஆர்த்ரா ராஜ் ஆகிய இரு பெண்களும் உடனடியாக பேருந்திலிருந்து கீழே இறங்கி ஓடிவந்தனர். நிலைமையை உணர்ந்த அவர்கள், சினோஜிற்கு காரிலேயே முதலுதவியாக உடனடியாக சி.பி.ஆர் (CPR) சிகிச்சையை அளிக்கத் தொடங்கினர். பின்னர், அங்கிருந்த ஒருவரின் வாகனத்தில் சினோஜை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழிநெடுகிலும் அந்த இரு பெண்களும் தொடர்ந்து அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளித்துக்கொண்டே சென்றது அவரது உயிரைக் காப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.

அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சினோஜிற்குப் பரிசோதனை செய்ததில், அவரது இதயத் தமனியில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, உடனடியாக அவசர ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வரும் தற்காலச் சூழலில், தக்க சமயத்தில் தங்களின் மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றிய இரு செவிலியர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பொதுமக்களுக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Visaka

Recent Posts

ரீல்ஸ் மோகம்…’காதல் கோட்டை’ க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்… ஓடும் ரயிலில் இளைஞர்கள் செய்த காரியம்… வீடியோவால் எழுந்த சர்ச்சை…! கொதிக்கும் நெட்டிசன்கள்…!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…

4 minutes ago

“வீட்ல தனியா இருக்கீங்களா”… அத்துமீறிய டெலிவரி பாய்… ஓங்கி அறைந்து வேலையை பறித்த பெண்ணின் வைரல் வீடியோ…!

மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…

10 minutes ago

“இந்தியாவை மறக்கவே முடியாது”… அமெரிக்கப் பெண் கண்ணீருடன் பதிவிட்ட வைரல் வீடியோ… ஓடி வந்த டெல்லி மாமா செய்த நெகிழ்ச்சியான காரியம்…!

அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்திற்குப் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். அப்படி ஒரு…

17 minutes ago

பகீர்.. ஓடும் பஸ்சில் எச்சில் துப்ப.. முயன்ற ITI மாணவர்… தலை துண்டாகி பலி…! கர்நாடகாவில் நடந்த பயங்கரம்…!

கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக…

17 minutes ago

மாதம் ₹20,000 வாடகை வீண் இல்லையா… இணையத்தில் தீயாய் பரவும் உபாஸ்னாவின் ‘ஸ்மார்ட்’ ஐடியா… நெட்டிசன்கள் அதிரடி விவாதம்…!

பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…

25 minutes ago

அட கடவுளே… 5 நிமிட வீடியோ கால்…! 36 லட்சத்தை பறிகொடுத்துவிட்டு… விவாகரத்து கோரும் கணவன்… நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!

சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…

26 minutes ago