மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணலால் (41) என்பவரின் மனைவி யாமினி. இவர்களது குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பண்டிகையின் போது நடனமாடுவதற்காக யாமினி பயிற்சி பெற்று வந்தார்.
சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் யாமினி நடனப் பயிற்சிக்குப் புறப்பட்டபோது, வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கிருஷ்ணலால் தனக்கு உணவு பரிமாறுமாறு கேட்டுள்ளார். நடனப் பயிற்சிக்கு நேரமாகிவிட்டதால் உணவு பரிமாற தாமதமாகும் என யாமினி கூறியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணலால், மனைவி யாமினியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் யாமினியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை முதலில் காவல்துறையிடம் மறைத்து நாடகமாடியுள்ளனர். எனினும், யாமினியின் பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து, உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, போலிஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் கிருஷ்ணலால் கொலையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இத்தம்பதியருக்கு 14 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் 'தலைமைப் பண்பு' குறித்துப் பேசிய கருத்துகள்…