தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகக் கடந்த இரண்டாண்டுகளாக துரை வைகோ சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகிறார். நாளைய தேர்தலில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் துரை வைகோ இடம்பெற வேண்டும்; அதுவே மதிமுகவிற்கு அவர் அளிக்கும் உண்மையான கௌரவமாக இருக்கும்” என்று உருக்கமாகப் பேசினார். இந்த எதிர்பாராத பேச்சு அங்கிருந்த தொண்டர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் உடனே கவனம் பெற்று வைரலானது.
மாவட்டச் செயலாளரின் இந்த அதிரடிப் பேச்சுக்கு மேடையிலேயே நகைச்சுவையாகவும் முதிர்ச்சியோடும் பதிலளித்தார் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ. அவர் பேசுகையில், “இப்படிப் பேசுவதைப் பார்த்து நான்தான் இவருக்குச் சொல்லிக்கொடுத்துப் பேசச் சொன்னேன் என எல்லாரும் நினைத்துக் கொள்வார்கள். ஒரு எம்.பி-யாக மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய இருக்கின்றன” எனக் கூறி அந்த விவாதத்திற்கு இயல்பாக முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும், தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி மற்றும் எதிர்கால அமைச்சரவை குறித்து தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்பை இந்த நிகழ்வு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…