“நீங்களே வீட்ல செஞ்சு சாப்பிடுங்க…” நள்ளிரவில் மட்டன் பிரியாணி ஆர்டர்… பார்சலை பிரித்து பார்த்த வாடிக்கையாளருக்கு ஷாக்… கிண்டலாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்…!!

Spread the love

அசாம் மாநிலம் போங்கைகாவோன் பகுதியைச் சேர்ந்த சமேஷ் மொண்டல் என்பவர் நள்ளிரவில் மிகுந்த பசியோடு ‘சொமாட்டோ’ செயலி மூலம் ‘கொல்கத்தா பிரியாணி’ என்ற உணவகத்தில் இருந்து மட்டன் பிரியாணி ஆர்டர் செய்திருந்தார்.

உணவுப் பொட்டலம் வந்ததும் மிகுந்த ஆவலுடன் அதைத் திறந்து பார்த்த அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில் பிரியாணிக்குப் பதிலாக வெறும் வெள்ளைச் சாதமும், அதனுடன் சிறிய பாக்கெட்டில் சாலட்டும் மட்டுமே இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது ஆர்டர் பில் மற்றும் உணவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “இது என்ன மாதிரியான மோசடி? நான் பிரியாணிக்குத்தான் பணம் கொடுத்தேன், வெற்றுச் சாதத்திற்கு அல்ல” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், “வெறும் சாதத்துடன் சாலட் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி” என அந்த உணவகத்தைக் கிண்டலாகவும் சாடியிருந்தார்.

இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் கிண்டலான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “அவர்கள் பிரியாணிதான் அனுப்பியுள்ளார்கள், அதை நீங்கள்தான் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட வேண்டும்” என்றும், “உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவே எண்ணெயில்லாத சாதமும் சாலட்டும் கொடுத்துள்ளார்கள்” என்றும் கலாய்த்து வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்குச் சொமாட்டோ நிறுவனம் பணத்தைத் திரும்ப வழங்கியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“காங்கிரஸுக்கு டாட்டா?”…. டெல்லி அரசியலில் ஸ்டாலினின் ‘சீக்ரெட் பிளான்’… கனிமொழி இறக்கிய அதிரடி மூவ்….!

தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…

5 minutes ago

ஸ்டாலின் போட்ட ஒரே போன் கால்…. சட்டென மாறிய அரசியல் களம்…. தேமுதிகவின் அதிரடி முடிவு…. இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…

13 minutes ago

“மை லவ்லி பிரதர் அஜித்…” நடிகர் அஜித்திற்கு பரிசு வழங்கிய முதல்வர் விஜய்…. பதிலுக்கு அஜித் என்ன கொடுத்தார் தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…

20 minutes ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி…. விஜய்யுடன் கைகோர்க்கும் OPS மகன்?…. தேனியில் கசியும் ரகசியத் தகவல்…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…

27 minutes ago

CM விஜய் அமைச்சரவையில் துரை வைகோ?…. மேடையில் வெளிப்படையாகப் பேசிய மா.செ.. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…

31 minutes ago

“இது பொதுவான கருத்து… உங்களுக்கே ஏன் பொருந்துகிறது…?” விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…. ஆதரவாக குரல் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் 'தலைமைப் பண்பு' குறித்துப் பேசிய கருத்துகள்…

49 minutes ago