தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உணவுத்துறை அமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பின்படி, பொதுமக்கள் இனி நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு அசல் ரேஷன் அட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ரேஷன் கார்டின் மின்னணு வடிவம் அல்லது ரேஷன் அட்டை எண் மட்டுமே இருந்தாலே நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை எளிதாகப் பெற முடியும். இந்த நடவடிக்கை பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்து, பொருள்களை வாங்கும் நடைமுறையை மேலும் எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள பெரிய ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிதாக 150 நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் விரைவாகவும் சிரமமின்றியும் தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் தொடர்பான தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…