தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்க கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1,000 வழங்கி வரப்படும் நிலையில், இத்தொகையை ரூ 2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன. அதேவேளையில், இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பு மற்றும் இதர அரசு தகுதி நிபந்தனைகளை மீறி, தகுதியற்ற சிலர் இத்தொகையைப் பெற்று வருவது அரசு நடத்திய முதற்கட்ட கள ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, திட்டத்தை முறைப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பிரதிநிதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகிறார்களா என்பது தீவிரமாக சரிபார்க்கப்பட்டு வருகிறது. தகுதி விதிமுறைகளுக்குப் புறம்பாக நிதியுதவி பெறும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை வருவாய்த்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை இணைந்து விரைவுபடுத்தியுள்ளன.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…