Connect with us

CINEMA

மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த படையென திரண்ட பொதுமக்கள் கூட்டம்… மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் தீவுத்திடல்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என்று கொண்டாடப்பட்டவர் .அரசியலிலும் சரி , சினிமாவிலும் சரி கால் பதித்து கலக்கிய இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு சில ஆண்டுகளாக வே உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.ன் அவர் சமீபத்தில் சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

#image_title

   

 

அதன் பின் பூரண குணமடைந்து விடு திரும்பினார். பிறகு நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். சினிமாவில் நடிகர் சங்க தலைவராக இருந்து இவர் செய்த சாதனைகள் ஏராளம் .அதேபோல அரசியலிலும் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் தலைவராகவும் சிறந்து விளங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வைரலானது .இதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று திடீரென நடிகர் விஜயகாந்த் மரணம் அடைந்து விட்டார் என்ற மருத்துவமனை அறிக்கை வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்பொழுது ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும், அவரது தொண்டர்களும் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக அவர்களின் உடல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. ள்ளது. அடுத்ததாக நடிகர் விஜயகாந்தின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என்கிற கேள்வி  எழுந்தது.  விஜயகாந்தின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் அவர்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கேட்டதாகவும், அதற்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், ஆனால் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை கொடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் உடல் தற்பொழுது பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. சாரை சாரையாய் மக்கள் கூட்டம் அவருக்கும் அஞ்சலி செலுத்தும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by BBC News Tamil (@bbctamil)

Continue Reading

More in CINEMA

To Top