“அவ தான் என் பொண்டாட்டி, கல்யாணம் பண்ணி வைங்க”…. வீட்டிற்குள் புகுந்த ‘சைக்கோ’ காதலன்…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த 2 உயிர்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!

Spread the love

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையம் பகுதியில், காதல் விவகாரத்தில் அரங்கேறிய இரட்டைக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் பூபதி என்பவரின் இளைய மகள் கௌசிகா (17). இவரும் நெகமம் கம்பளாங்கரையைச் சேர்ந்த அபிஷேக் (24) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அபிஷேக் தனது பெற்றோருடன் சென்று பெண் கேட்டபோது, கௌசிகாவிற்கு திருமண வயது பூர்த்தியாகவில்லை என்பதால் தற்போது திருமணம் செய்து தர முடியாது என்று சிறுமியின் பெற்றோர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையிலும், அபிஷேக் தொடர்ந்து கௌசிகாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு கௌசிகாவின் வீட்டிற்குச் சென்ற அபிஷேக், மீண்டும் திருமணப் பேச்சை எடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கௌசிகாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த கௌசிகாவின் பாட்டி திருமாத்தாள் (65) மற்றும் அக்கா ஹரிதா (18) ஆகியோரையும் அபிஷேக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த கோரத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், கௌசிகா மற்றும் அவரது பாட்டி திருமாத்தாள் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கையில் பலத்த காயமடைந்த ஹரிதாவிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்ட இந்த சம்பவம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெகமம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளி அபிஷேக்கை உடனடியாகப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருதலைப்பட்சமான வற்புறுத்தலால் விளைந்த இந்த விபரீத முடிவு ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.

Nanthini

Recent Posts

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

13 seconds ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

6 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

14 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

16 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

16 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

19 minutes ago