மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள பர்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திர மடவி என்பவர் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தேடுதல் வேட்டையின் போது, கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் சுரேந்திரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தலைப்பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டு, பின்னர் இது தற்கொலை அல்லது விபத்து போலக் காட்டப்பட வேண்டும் என்பதற்காகச் சடலம் குளத்தில் வீசப்பட்டிருந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதியானது.
முதற்கட்டமாக சம்பவ இடத்தில் எந்தவித இரத்தக் கறைகளோ அல்லது போராட்டத்திற்கான அறிகுறிகளோ இல்லாததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, தடயவியல் குழுவினர் (FSL) மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சுற்றியுள்ள வயல்வெளிகளில் 24 மணி நேரம் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. அப்போது, குளத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வயல் வரப்பில் ஒற்றை இரத்தத் துளி கண்டறியப்பட்டது. மோப்ப நாய் அந்த இரத்தத் துளியை முகர்ந்து பார்த்து, நேராகக் குற்றவாளியான சோனு மடவியின் வீட்டின் பின்புறத்திற்கு போலீசாரைக் கூட்டிச் சென்றது.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சோனு மடவி தனது நண்பன் மிதுன் சையாம் என்பவனுடன் சேர்ந்து இக்கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டான். கொலையுண்ட சுரேந்திர மடவிக்கும் சோனுவின் தாய்க்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததே இக்கொலைக்குக் காரணமாகும். பலமுறை எச்சரித்தும் சுரேந்திர மடவி தனது வழக்கத்தை மாற்றிக் கொள்ளாததால், ஆத்திரமடைந்த சோனு கோடரியால் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, இரத்தக் கறைகளின் மீது மண்ணைப் போட்டு ஆதாரங்களை மறைக்க முயன்றுள்ளான். இருப்பினும், காவல்துறை அந்த ஒற்றை இரத்தத் துளியின் மூலம் வழக்கைக் துப்பறிந்து, கொலையாளிகளைக் கைது செய்தது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று…
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திராவிட…
சர்வதேச சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை தங்கத்தின் விலை லேசான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வர்த்தக அமர்வில்…
தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளராக இருந்த பூக்கடை மகேந்திரன், "அதிமுக ஒன்றிணைய வேண்டும்" என்ற…
தமிழகத்தில் உணவு விமர்சனம் (Food Review) என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பெயர் இர்ஃபான். தனது "Irfan's View"…
விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, ஒரே நேரத்தில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் (BFI) தலைவராகவும் நீடிப்பது…