ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், சத்தியவேடு அருகே உள்ள என்.ஆர். அக்ரஹாரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் – ஹேமாவதி தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகனும், 5 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இதனால் ஹேமாவதி கடும் மன உளைச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளாகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்த ஹேமாவதி குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தையின் வாய் மற்றும் மூக்கை ஹேமாவதி தனது கையால் பலமாக அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 5 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியவேடு போலீசார், குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்ட தாய் ஹேமாவதியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பச் சண்டையின் கோபத்தில் பெற்ற தாயே குழந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நுகர்வோரின் மின் பயன்பாட்டைக் கணக்கிட, மின்வாரிய ஊழியர்களின் உதவியின்றிச் செயல்படும் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்…
நான்கு ஆண்டு கால உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப்…
கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…
மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…
மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…