Connect with us

CINEMA

சந்தானத்துடன் இணைந்து மரக்கன்றை நட்ட நடிகை சுரபி… பிரஸ் மீட்டில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவருடைய ரைமிங் காமெடிக்கென்று ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது. தனது திரைப்பயணத்தில் சிம்புவுடன் சேர்ந்து காதல் அழிவதில்லை, மன்மதன், வல்லவன், வானம் என பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

   

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக சந்தானம்  வலம் வரத் தொடங்கினார். குறுகிய காலகட்டத்திலேயே விஜய், அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக  ஜொலித்தார். தமிழ் சினிமாவில் இவரின் காமெடிக்கென்று ஓடிய படங்கள் ஏராளம் உள்ளன. 

இதைத்தொடர்ந்து படிப்படியாக நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சந்தானம் ஹீரோவாக 2014ல் அவதாரம் எடுத்தார். முதன் முதலில் இவர் தமிழ் திரையுலகில் ஹீரோவாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து டிக்கிலோனா, சபாபதி என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது அறிமுக இயக்குனர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில், ஆபிரகாம் இசையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகி சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் தான் டிடி ரிட்டன்ஸ்.  இத்திரைப்படத்தில் சந்தானத்துடன் நடிகை சுரபி, நகைச்சுவை நடிகர் ரிடின் கின்ஸ்லே, மூத்த நடிகர் மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராம், தீபா, முனீஸ் காந்த் மற்றும் பிரபல சண்டை பயிற்சியாளர் பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் Bhootala Bangla என்ற பெயரில் வெளியானது. தற்பொழுது தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்காக, அங்கு நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் மற்றும் கதையின் நாயகி சுரபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் பொழுது அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய நடிகர் சந்தானம், கிரீன் இந்தியா சேலஞ்ச் வழங்கும் மரக்கன்று நடும் சவாலை ஏற்றுக் கொண்டு, மரக்கன்று நட்டு அந்த இயக்கத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Continue Reading

More in CINEMA

To Top