Connect with us

CINEMA

இயக்குனர் ஹரி தன் படங்களில் கடைபிடிக்கும் செண்ட்டிமெண்ட்… இந்த விஷயத்த கவனிச்சிருக்கீங்களா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர் அடுத்து நடிகர் விக்ரம்மை வைத்து இயக்கிய “சாமி” திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் இயக்குனராக மாறினார்.

அதனை தொடர்ந்து “ஆறு”, “தாமிரபரணி”, “வேல்”, “சிங்கம்” என அதிரிபுதிரியான பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார் ஹரி. இவரது திரைப்படங்களில் திரைக்கதை விறுவிறுவென செல்லும். இது இவரது தனித்துவமான பாணியாக ஆகிப்போனது. அதே போல் இவரது திரைப்படங்களில் வசனங்கள் அனைத்தும் அனல் பறக்கும். அதே போல இவரின் படங்களின் கதாநாயகனாகவோ அல்லது ஒரு ரௌடியாகவோதான் இருப்பான். ஆக்‌ஷன் காட்சிகளுக்காக இப்படி தனது கதைக்களத்தை வடிவமைத்துக் கொள்வார் ஹரி.

   

தமிழ் சினிமாவில் பிரசாந்த், விக்ரம், சூர்யா, விஷால், பரத், தனுஷ் மற்றும் அருண் விஜய் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் ஹரி. இடையில் அவர் இயக்கிய பூஜை மற்றும் யானை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனையடுத்து இன்று அவரின் ரத்னம் திரைப்படம் வெளியாகிறது. இந்த படம் அவருக்குக் கம்பேக்காக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

#image_title

இந்நிலையில் இயக்குனர் ஹரி தன்னுடைய படங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஒரு செண்ட்டிமெண்ட் விஷயத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். ஹரி கடவுள் நம்பிக்கையாளர். தன் படங்களின் முதல் ஷாட்டை ஏதாவது ஒரு கோவில் கோபுரத்தில்தான் அவர் தொடங்குவார். மேலும் தன்னுடைய இயக்குனர் கார்டை கோபுரத்தின் அருகேதான் போடுவார். அதை தவிர்க்க முடியாத ஒரு காட்சியாக இன்றளவும் இயக்குனர் ஹரி தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top