Connect with us

CINEMA

நடிப்பை தாண்டி இத்தனை திறமை கொண்டவரா விடுதலை பட நாயகி.. பலரும் அறியாத தகவல் இதோ..

ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கச்சி ரெஹானா மகளும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கையும், நடிகையுமான பவானி ஸ்ரீ பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். விடுதலை படம் மூலம் பிரபலமான இவர், அதற்கு முன்பே விஜய் சேதுபதியின் கா.பெ.ரணசிங்கம் படத்தில் அவரின் தங்கையாக அறிமுகமானார். அதன்பின் பாவக்கதைகள் வெப் சீரிஸில் சாந்தனு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

Bhavani sre

   

அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிடும் பவானி ஸ்ரீ நடிகை மட்டுமல்ல பல திறமைகளை கொண்டவர். பாடகி ரெஹானாவின் மகள், இசையமைப்பாளரின் தங்கையான இவர், ஒரு பாடகியும் கூட. ஜிவி பிரகாஷ் இசையில் நான்கு பாடல்களை பாடியுள்ளார் இவர். ஷீரடி சாய் பாபா என்ற ஆல்பம் பாடலையும், புத்தம் புது காலை வெப் சீரிஸில் ஓஹோ எந்தன் பேபி, குல்பி குச்சி, கன்னம் அதில் வண்ணம் போன்ற மூன்ற பாடல்களையும் பாடியுள்ளார்.

Viduthalai actress bhavani sre

அதுமட்டுமல்ல இவர் உதவி இயக்குனரும் கூட. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த இது என்ன மாயம் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். சில சமயங்களில் படத்திலும் இவை உதவி இயக்குனராக இருந்துள்ளார். இப்படி பன்முக திறமை கொண்ட பவானி ஸ்ரீ நிச்சயம் கலைத்துறைக்கு ஒரு மிகப்பெரிய பங்காக இருப்பார் என்பதில் ஐயமில்லை.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top