Connect with us

CINEMA

முதல்வர் ஆனதும் சினிமாக்காரர்களை முழுவதுமாக தவிர்த்த ஜெயலலிதா.. ஆனா, இந்த 2 பேருக்கும் மட்டும் அளித்த சலுகை

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான ஜெயலலிதா. வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமான ஜெயலலிதா வெகு விரைவிலேயே அப்போது உச்சத்தில் இருந்த எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ஜெயலலிதாவின் நடிப்பு திறமையில் கவரப்பட்ட எம் ஜி ஆர், அவரை தன்னுடைய பல படங்களில் பயன்படுத்தினார். எம் ஜி ஆரோடு அதிக படங்களில் கதாநாயகியாக இணைந்து நடித்தவர் ஜெயலலிதாதான். இருவரும் இணைந்து 28 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

   

ஜெயலலிதா முதல் முதலில் நடித்த தமிழ் திரைப்படம் என்றால் அது ஜாம்பவான் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிற ஆடை’ திரைப்படம்தான். ஸ்ரீதரின் பல படங்களைப் போலவே இதுவும் ஒரு முக்கோணக் காதல் திரைப்படமாகதான் உருவானது. ஆனால் அவரை பிரபல கதாநாயகி ஆக்கியது எம் ஜி ஆர்ருடன் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்.

70 களின் இறுதியில் ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அவர் அதைப் புரிந்துகொண்டு அரசியலுக்கு வந்தார். எம் ஜி ஆர் ஆரம்பித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்து கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டார். கட்சியில் அவரது வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.

எம் ஜி ஆரின் மறைவுக்குப் பிறகு அவர் 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். முதலமைச்சர் ஆன பின்னர் திரைத்துறையினரை சேர்ந்தவர்களை சந்திப்பதை முழுவதுமாக தவிர்த்தார். அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர் அவரைப் பார்க்க சென்ற போது அவரையே பல மணிநேரம் காக்க வைத்தார் என சொல்லப்படுகிறது.

ஆனால் சினிமாத் துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர் பாலாஜி மற்றும் சோ ஆகிய இருவர் மீதும் அளவுக்கதிமாக மரியாதை வைத்திருந்தாராம். அவர்கள் இருவரும் எப்போது நினைத்தாலும் எந்த தடையும் இல்லாமல் ஜெயலலிதாவை சென்று சந்திக்க முடியும் என்ற நிலையில் இருந்தார்களாம். பாலாஜி ஜெயலலிதாவை வைத்து சில படங்களைத் தயாரித்தவர். அதுபோல சோ ஜெயலலிதாவுக்கு பல வகையில் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top