Connect with us

CINEMA

ரம்யா கிருஷ்ணன் இல்லை… ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகையா..? 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1999 இல் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் ‘படையப்பா’. இந்த படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மொத்த வசூல் அனைவரையும் பிரமிக்க வைத்தது. படையப்பா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது.

   

இத்திரைப்படத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 210 பிரிண்டுகளுடன் வெளியானது. 700000 ஆடியோ கேசட்டுகளுடன் வெளியான முதல் திரைப்படம் இதுதான். இத்திரைப்படத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருப்பார். இப்படத்திற்கு ஐந்து மாநில விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகள் கிடைத்தன.

படையப்பா திரைப்படம் இப்பொழுது ஒளிபரப்பானாலும்  சலிக்காமல் பார்க்கலாம்.  5 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படத்தை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தயார் செய்திருந்தார். எத்தனை திரைப்படங்கள் திரையுலகில் வந்தாலும் மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த திரைப்படம் தான் படையப்பா. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது.

#image_title

ரம்யா கிருஷ்ணன் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இந்த படத்தில், நீலாம்பரி வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவலை, இப்படத்தின் இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதன்படி, ‘படையப்பா படத்தில், நீலாம்பரி வேடத்தில் முதலில் நடிக்க கம்மிட் ஆனவர் நடிகை மீனா தான் என்றும், ஆனால் அவரின் அப்பாவித்தனமான முகம் நீலாம்பரி வேடத்திற்கு பொருந்தவில்லை. எனவே ரம்யா கிருஷ்ணாவை இப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top