Connect with us
Actor MGR

CINEMA

21 வயதில் மனைவியை பிரிந்த எம்ஜிஆர் – 6 மாதம் கூட நீடிக்காத திருமண வாழ்க்கை – எம்ஜிஆர் வாழ்வில் நடந்த சோகக்கதை

நடிகர் எம்ஜிஆர் வாழ்க்கையில் பல வெற்றிகளை கண்டவர். அமெரிக்காவில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயித்து, 3வது முறையாக முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்தவர். நாடோடியா, மன்னனா என்ற நிலையில் நாடோடி மன்னன் படத்தை எடுத்து, மன்னன்தான் என்று நிரூபித்தவர். அள்ளிக்கொடுக்கும் வள்ளல் குணம் கொண்டவர். ஆனால் அவரது வாழ்விலும் பல சோகங்களும், வேதனைகளும் நிறைந்திருக்கின்றன. அதுவும் அவரது முதல் திருமண வாழ்க்கை ஆறே மாதங்களில் முடிவுக்கு வந்திருக்கிறது.

   

எம்ஜிஆர், எம்ஜி சக்ரபாணி என்ற இருவரது தாய் சத்யா. அம்மாவின் பேச்சை மீறாத பிள்ளைகள். அண்ணன், தம்பி இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது அவரது கட்டளை. அவர் இறக்கும் வரை அதே போல் ஒன்றாகவே இருவரும் வாழ்ந்தனர். எம்ஜிஆருக்கு 21 வயது ஆன போது பார்கவி என்ற பெண்ணை பார்த்து, திருமணம் செய்து வைத்தனர்.

அந்த பெண்ணுடன் செனன்னையில் ஆறு மாதங்கள் குடும்பம் நடத்தினார். அப்போது உலகப் போர் வருவதாக இருந்தது. அதனால் எம்ஜி சக்ரபாணி மனைவி, பிள்ளைகள், மற்றும் எம்ஜிஆரின் மனைவி ஆகியோரை சொந்த ஊரில் பாதுகாப்பாக இருக்க அனுப்பி வைத்தனர். அப்போது சைக்கிள் ரிக்‌ஷாவில் தன் மனைவியை எம்ஜிஆர் அழைத்து வந்த போது, அவர் தோளில் சாய்ந்தபடி அழுதுக்கொண்டே அந்த பார்கவி ஊருக்கு சென்றிருக்கிறார்.

அப்படி அவர் சென்ற நிலையில், சில மாதங்கள் கழித்து அவர் இறந்து விட்டதாக எம்ஜிஆருக்கு தகவல் வருகிறது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த ஊருக்கு சென்ற போது எம்ஜிஆரின் மனைவியை அடக்கம் செய்துவிடுகின்றனர். நீங்கள் வர தாமதமாகும் என்பதால் வேறு வழியின்றி அடக்கம் செய்துவிட்டோம் என்று கூறுகின்றனர். கடைசியில் மனைவியின் முகத்தை ஒருமுறை கூட பார்க்க முடியாமல் போய் விடுகிறது.

முதல் மனைவியுடன் ஆறு மாதங்களே வாழ்ந்த எம்ஜிஆர் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார். மனம் நலம் பாதித்து பித்து பிடித்தவர் போல இருக்கிறார். சில நேரங்களில், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட யோசித்திருக்கிறார். இதையறிந்த அவரது அண்ணன், அவரை எப்போதும் உடன் இருந்து கவனித்துக்கொண்டே இருக்கிறார். அதன்பிறகு சில ஆண்டுகள் கழிந்த பிறகு சதானந்தவதி என்ற 15 வயது பெண்ணை எம்ஜிஆருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இப்படி எம்ஜிஆரின் முதல் திருமண வாழ்க்கை சோகக்கதையாக முடிந்து போயுள்ளது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top